Thursday, July 21, 2011

வீடு

உங்க வீட்டு முகவரியை கேட்டால் என்ன சொல்வீர்கள்?  இதில் இளங்கோ சற்று வித்தியாசமான ஆள் சற்றும் யோசிக்காமல் 15 வருடங்களுக்கு முன்னால் கைவிட்டுபோன சொந்தவீட்டு முகவரியை தான் கூறுவான்.  அதன் பின் பல வாடகை வீடுகளுக்கு மாறி இருந்தாலும் அவன் இறக்கும் வரை இந்த பழக்கம் மாறவில்லை. கவிஞர் மீராவின் கவிதை ஒன்றில் விட்டுச்சென்ற வீட்டின் அடுப்படியில் அந்த வீட்டுப்பெண்களின் விசும்பல் கேட்கும் என்று கூறியிருப்பார்.சொந்தவீட்டை விற்று வாடகை வீட்டில் குடியிருப்பது கொடியது.

நடுத்தர வர்க்கத்திற்கு சொந்த வீடு என்பது வாழ்க்கை இலட்சியம்.  வாழ்வின் பெரும் பகுதியை இந்த போராட்டத்தில் கழித்தவர் அநேகம் பேர்.  விரும்பி கட்டிய வீட்டில் வாழ்வதற்கு முன் இறந்தவரும் உண்டு.
பாலுமகேந்திராவின் வீடு படம் பார்க்க வேண்டும்.  கடந்த ஒரு வருடமாக டிவிடி தேடிக்கிட்டு இருக்கேன்.

No comments:

Post a Comment