எங்க வீட்டுல நான் நாலாவது படிக்கும் போது T .V வாங்கினோம்.அதுல கிரிக்கெட் அறிமுகமாகி கிட்டி,குண்டு,பம்பரம் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு அரசரடி கிரௌண்ட் ,U .C ஸ்கூல் கிரௌன்ட்ல கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சேன்.அதுக்கப்பறம் சுப்புராம் அத்தான் கிட்ட அழுது அடம்பிடிச்சு ஒருபேட் வாங்கினேன்.எங்க தெரு டீம்ல,பேட் புண்ணியத்துல ஐயா தான் லாஸ்ட் பேட்ஸ் மேன்.இந்த கதை ஒரு மூணு நாலு வருஷம் போச்சு.
அதுக்கபுறம் லேபர் ஸ்கூல ஏழாம் கிளாஸ் படிக்கும்போது ஹாக்கி டீம்ல என் அண்ணன் இருந்ததாலும்,டீம்ல ஆள் இல்லாத காரணத்தாலும் அடியேன் சேர்த்துக்கொள்ளபட்டேன்!.
அதுக்கபுறம் எட்டாம் கிளாஸ்ல கபடி அப்படியே scouts ,N .C .C அப்படின்னு ஒரு வருஷம் படம் ஒடிச்சு.
அடுத்த வருஷம் கிளப்ல நீச்சல் கத்துகிட்டு மாவட்ட நீச்சல் போட்டில தோற்ற பிறகு அதை விட்டுடேன்.
அப்புறம் T .வ ல டென்னிஸ் பார்த்து ஒரு இவான் லென்டில் இல்ல போரிஸ் பெக்கர் ஆகணும்னு முடிவுபண்ணி டென்னிஸ் கோச்சிங் போக ஆரம்பிச்சேன்.அது சும்மா ஒரு வருஷம் ஒடிச்சு.என்னைக்கு மாஸ்டர் valley சொல்லிகொடுக்க ஆரம்பிச்சாரோ அதோட அதுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டேன். பாடுன வாயும் ஆடுன காலும் சும்மா இருக்காது பாருங்க +2 லீவுல billards ,shuttlecock விளையாடினேன்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு
"JACK OF ALL BUT KING OF NONE " .அதுக்கு நான் ஒரு வாழும் உதாரணம்.
சொல்ல மறந்துட்டேனே இப்ப மூணு வருசத்துக்கு ஒரு கம்பெனி மாறிட்டு இருக்கேன். தூத்துக்குடி,சென்னை,ஹைதராபாத் ஒரு சுத்து சுத்தி இப்ப பெங்களூர். அடுத்து எங்கே ..தெரியலே .
No comments:
Post a Comment