போன வாரம் பெங்களுர் நடராஜா தியெட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் திரைப்படம் ரீலிஸாச்சு புதுப்படத்துக்குள்ளே கட்அவுட், தோரணம் கூடுதலா பிரியாணியோட.நம்மூரு காரங்களுக்கு சினிமா இரத்தத்தோடு கலந்த ஒன்று.
எங்க அம்மாவோட அப்பா சிவாஜி படத்துக்கு மட்டும்தான் கூட்டிட்டு போவாராம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் எம்.ஜி.ஆர் படம் பார்த்தாங்களாம் !!!.
கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கொடுக்கிற முதல் சேலை
மாதிரி பார்க்கிற முதல் படம் ரொம்ப சென்டிமெண்டானது.
எங்க அம்மா முதல்ல பார்த்த படம் பூக்காரி
எங்க சித்தி பார்த்த படம் இணைந்த கைகள்
என் பொண்டாட்டி செலக்ஷன் அன்பே ஆருயிரே
என் மச்சினன் பார்த்த படம் தாம்தும் இப்ப லேட்டஸ்ட்டாக கல்யாணமான என் சகலை போன படம் கோ.


No comments:
Post a Comment