மதுரைல எப்பவும் இரண்டு வகையான இங்கிலீஷ் படம் வரும்.ஒன்னு நல்ல படங்கள் இன்னொன்னு பரங்கிமலை ஜோதி வகையறா.அதுல நல்ல படங்கள் ஆரம்ப காலத்தில் டவுன் ஹால் ரோட்டில் உள்ள ரீகல் தியேட்டர்ல வந்துச்சு.அப்புறம் காலபோக்கில் அதை லைப்ரரியா மாத்திட்டாங்க. அப்புறம் காளவாசல்ல மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் வந்துச்சு.அதுல முத படம் கமல் நடிச்ச விரதம் படம்.அதுக்கப்புறம் ஒன் அண்ட் ஒன்லி இங்கிலீஷ் படம் தான்.
டீச்சர்னா பொம்பளை சார்னா ஆம்பளை இது தான் அப்ப எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷ்.இந்த லட்சனத்துல முக்காவாசி மாப்பிள்ளை விநாயகர்ல இங்கிலீஷ் படத்துக்கு போவேன். ஆக்க்ஷன் படம்னா பெரிசா ஒன்னும் கஷ்டம் இல்ல படம் முழுக்க சண்டை தான்.வெறும் டயலாக் உள்ள படம்னா செத்தான் எதிரி.எல்லாரும் சிரிக்கும் போது சிரிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திருவேன்.அப்புறம் காலேஜ் போக ஆரம்பிச்ச பிறகு டயலாக் மட்டும் உள்ள படம் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது. பி.எஸ்.சி. முடிச்சி ஒரு வருஷம் சும்மா இருந்தப்போ மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் ஓனர் பையன் அம்பு ப்ரெண்டானான். அதுக்கப்புறம் ஒரு படம் விடுறதில்ல. தியேட்டர்ல ஆப்ரேட்டர் ரும் பக்கத்துல ஒரு பாக்ஸ் இருக்கும். தியேட்டர் ஹவுஸ்புல் ஆனா பாக்ஸ்ல உக்கார்ந்து படம் பார்ப்போம். இப்பெல்லாம் மாப்பிள்ளை விநாயகரில் தமிழ் படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகுது.
ஓரளவுக்கு இங்கிலீஷ் புரிய இந்த தியேட்டர்ல பார்த்த இங்கிலீஷ் படங்களும் ஒரு காரணம்.அதோட போனஸா 'F ***' மாதிரி பல நல்ல வார்த்தைகள் கத்துகிட்டதும் இங்கிலீஷ் படம் பாத்துதான்.
இன்னொரு முக்கியமான விஷயம் மாப்பிள்ளை விநாயகரில் முட்டை போண்டா சூப்பரா இருக்கும்.





